இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!
உத்தமபாளையத்தில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பூக்கடை வீதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சக்திவேல் (21). தச்சுத் தொழிலாளியான இவருக்கு, நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த சக்திவேல் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.