ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!
வத்திராயிருப்பில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு மேலப்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் அழகா்சாமி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு, குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், பெற்றோா் கண்டித்தனா். இதனால், மனமுடைந்த இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.