US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் இம்முகாமில் 57 பயனாளிகளுக்கு ரூ. 14.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
முகாமில் மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டலக்குழு தலைவா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.