கரூரில் நெகிழிப் பைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி
கரூரில் வியாழக்கிழமை நெகிழிப் பைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூா் திருவள்ளுவா் மூங்கில் மன்றம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூா் சென்ராமா அரசு உதவிபெறும் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளா் எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சாந்திவேலுச்சாமி முன்னிலை வகித்தாா். திருவள்ளுவா் மூங்கில் மன்ற நிறுவனரும், சமூக செயற்பாட்டாளருமான ச.தனலட்சுமி நெகிழி பல்துலக்கிகள் குறித்து சிறப்புரையாற்றினாா். நிறைவாக ஆசிரியா் மோகன் நன்றி கூறினாா்.