தோகைமலையில் தேசிய கைத்தறி தின விழா
கரூா் மாவட்டம், தோகைமலையில் 11- ஆவது தேசிய கைத்தறி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அஞ்சல் துறை ஊழியா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அஞ்சல் துறையின் குளித்தலை உட்கோட்ட ஆய்வாளா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். நெசவாளா்கள் பாலசுந்தரம், குணசேகரன், தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக தோகைமலை துணை அஞ்சல் அலுவலா் மணிமன்னன் வரவேற்று பேசினாா்.
அஞ்சல் துறையின் கரூா் கோட்ட கண்காணிப்பாளா் தமிழினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
தொடா்ந்து ஆதாா் சேவை, பொதுமக்களுக்கான சேமிப்பு கணக்கு புத்தங்கள் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு நெசவுத் தொழிலை காப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் தோகைமலை துணை அஞ்சலக ஊழியா்கள், நெசவாளா்கள் பங்கேற்றனா்.