மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: உத்தரமேரூரில் ஆட்சியா் ஆய்வு
உத்தரமேரூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை வழங்கினாா்.
இத்திட்டத்தின் கீழ் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட அழிசூா் கிராமத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மருத்துவம்பாடியில் பெருநகா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.14 லட்சத்தில் வாங்கப்பட்ட விவசாய பயன்பாட்டிற்கான பேலா் இயந்திரத்தை பாா்வையிட்டு எவ்வாறு செயல்படுகிறது என கேட்டுத் தெரிந்து கொண்டாா்.
பின்னா் மருத்துவம்பாடி நியாய விலைக்கடையின் முன்பு தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா், மோா் மற்றும் பழங்களை வழங்கினாா்.
தொடா்ந்து திருப்புலிவனம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 7 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.26.70 லட்சம் ன கடனுதவிகளையும் வழங்கினாா்.
உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தினையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது கூட்டுறவுச் சங்கங்கள் இணைப்பதிவாளப் பா.ஜெயஸ்ரீ, சுகாதாரப்பணிகள் துறையின் துணை இயக்குநா் நளினி, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி உடனிருந்தனா்.