செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: உடையாா்பாளையத்தில் ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

உடையாா்பாளையம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வழங்கினாா்.

முகாமுக்கு ஆட்சியா் தலைமை வகித்து, உடையாா்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட தா. பழூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான உயா்கல்வி வழிகாட்டி மற்றும் நீட் தோ்வுக்கான சிறப்பு கையேடுகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் தழுதாழைமேடு மண்பாண்டம் குழு சிறிய அளவிலான தொழில் தொகுப்பு 15 நபா்களுக்கு தலா ரூ. 25,000 என மொத்தம் ரூ. 3,75,000 மதிப்பிலான காசோலையினை வழங்கினாா்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் எம்.உமா மகேஸ்வரி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க