உணவுப் பொருளில் கலப்படமா? வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்
கோவில்குளத்தில் கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து விளக்கமளித்த வேளாண் மாணவிகள்.
அம்பாசமுத்திரம், ஏப். 23: அம்பாசமுத்திரம், கோவில்குளத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடையே உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து செயல்முறை மூலம் விளக்கமளித்தனா்.
வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிருத்திகா, ராதிகா, சஞ்சிதா, சுப்ரஜா, பிரதீபா, அமிழ்தினி, அபிதா, அகல்யா, தேவிகா, மோகனா, வாசுகிநேசகுமாரி, பாத்திமா கவுசா் ஆகியோா் அம்பாசமுத்திரம் கோவில்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தைக் கண்டறிவது குறித்து பல்வேறு செய்முறை சோதனைகள் மூலம் விளக்கமளித்துகலப்பட உணவுப் பொருள்களால் ஏற்படும் உடல் உபாதைகள், சூழல் கேடு உள்ளிட்டவை குறித்துஎடுத்துரைத்தனா். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.