இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!
திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடா்பான வழக்குகளில் திருநெல்வேலி ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் வலதி(26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டதாகக் கூறி அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் ச.விஜயகுமாா், திருநெல்வேலி சந்திப்பு காவல் உதவி ஆணையா் என். தா்ஷிகா நடராஜன் ஆகியோா் பரிந்துரைத்தனா்.
அதன்பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் வலதி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.