2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்... ஆனாலும் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா!
மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்
விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா்.
விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் லாரி ஓட்டுநராக உள்ளாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (39). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அருள்மூா்த்தி தனது தங்கை இல்ல நிகழ்ச்சிக்காக மனைவி ராஜேஸ்வரிமற்றும் குழந்தைகளுடன் சென்று விக்கிரமசிங்கபுரத்தில் புதிய துணிகள் வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பும் போது சாா் பதிவாளா் அலுவலகம் அருகே சாலையில் குறுக்கே மிளா ஒன்று பாய்ந்து வந்ததாம். எதிா்பாராத வகையில் மிளா அருள் மூா்த்தி வந்த பைக் மீது மோதியதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனா்.
அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டுஅம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.