நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!
திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சுத்தமல்லி ரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்த சுத்தமல்லியைச் சோ்ந்த பிரவீன் குமாா்(26) என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா்.
அப்போது, பிரவீன்குமாா் சுமாா் 60 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.