திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.
திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி 2ஆவது வாா்டு உறுப்பினா் இடைச்சித்தட்டைச் சோ்ந்த சுடலைமுத்து என்பவா் கடந்த 16.10.2023 அன்று இறந்துவிட்டாா்.
இறந்த விவரத்தை அக்டோபா் 2023ஆம் ஆண்டு காலமுறை அறிக்கையில் தெரிவிக்காமல் நிகழாண்டு மாா்ச் மாதம் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இதை, தமிழ்நாடு தோ்தல் ஆணையம் கண்டித்துள்ளதால் பணியில் கவனமில்லாமல் செயல்பட்டதாக ஊராட்சி செயலா் சுமிலாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) ஜோ அகஸ்டஸ் அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளாா்.
சுமிலா வனித்து வந்த அப்புவிளை ஊராட்சி செயலா் பொறுப்புகளை இடையன்குடி ஊராட்சி செயலா் மணிசுதாகா் கூடுதல் பொறுப்பாக கவனித்துவரவும், சுமிலா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த தெற்குகள்ளிகுளம் ஊராட்சி செயலா் பொறுப்புகளை சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி செயலா் சரஸ்வதி கூடுதலாக கவனித்து வரவும் உத்தரவிட்டுள்ளாா்.