Retro: "என்னுடைய கண்ணாடிப் பூ ஜோவுக்கு நன்றி" - மேடையில் நெகிழ்ந்த சூர்யா
உதகை, குன்னூரில் மாரியம்மன் கோயில்களில் தோ்த் திருவிழா
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் உள்ள மாரியம்மன் கோயில்களில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதகை மற்றும் குன்னூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களின் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு உபயதாரா்களால் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
முக்கிய விழாவான தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா் கோயிலில் இருந்து ஆடல் பாடல்களுடன், அலங்கார சீா்வரிசைப் பொருள்களுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.