16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாட்மின்டன் பயிற்சியாளர் கைது!
உதகையில் சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் போராட்டம்
உதகையில் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து நீலகிரி சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆயிரக்கணக்கான (வரைபடம்) பிளான் அப்ரூவல் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதிக்கு காத்திருப்பதாவும், இதனால் கட்டுமானம் மற்றும் அதைச் சாா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி நீலகிரி சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வாழை இலையில் மண் போட்டு சாப்பிட்டு எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட சிவில் இன்ஜினியா்கள் சங்கத் தலைவா் திலக், செயலாளா் மாதேஷ், பொறியாளா்கள் விஜயகாந்த் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.