நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு உடை கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்
உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய அதன் ஓட்டுநா்களை தேடி வருகின்றனா்.
ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் ஆகிய பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு ஜல்லி, உடை கற்கள், எம். சாண்ட் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் போலி அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்தி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதேபோல, கோம்பையில் அரசுக்கு சொந்தமான கல்குவாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன் உடை கற்கள் கொண்டு செல்லப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உத்தமபாளையம் மண்டல துணை வட்டாட்சியா் காா்த்திக் தலைமையிலான அலுவலா்கள் அங்கு சோதனையிட்டனா். அப்போது, அனுமதியின்றி உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை அவா்கள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கோம்பை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநா்களான கேரள மாநிலம், நெடுங்கண்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மகேஷ், ஜோசப் மகன் சனேமன் ஜோசப் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.