செய்திகள் :

“உன் உயிர் என் கையில்தான்”-பெண் காவலரை மிரட்டிய எஸ்.ஐ; இருவரும் சஸ்பெண்ட்! - நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார். அதே பிரிவில் இந்திராகாந்தி என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி இருவரும் நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இந்த பிரச்னையின் எதிரொலியால் செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

இதற்கிடையே இந்திராகாந்தியை செல்வகுமார் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய செல்வகுமார், “நீ என் வேலையை கெடுத்துவிட்டாய். உன் பிள்ளைகளை பத்திரமாய் பார்த்துக் கொள். எனக்கு எப்போது வேண்டுமானாலும் கிறுக்கு பிடித்துவிடும். நேற்றிரவே உன்னை முடித்திருப்பேன். நூலிழையில் தப்பிவிட்டாய். உச்சகட்ட கொலைவெறியில் இருந்தேன். நேற்றே உன்னை முடித்திருப்பேன். இன்றைக்கு உன்னை அடக்கம் செய்திருப்பார்கள்.

என்றைக்கு இருந்தாலும் உன் உயிர் என் கையில்தான். ராஜாராம்கூட புகார் அளித்துப் பேசியிருக்கிறார்” என்றார். அதற்குப் பதிலளித்துப் பேசிய இந்திராகாந்தி, “உன் பேமிலி தூத்துக்குடியில்தான் உள்ளது. கோவில்பட்டிக்கும் திருச்செந்தூருக்கும் எவ்வளவு தூரம்? உனக்கு மட்டும்தான் பனிஸ்மெண்ட் கிடைத்திருக்கிறதா? எனக்கும்தான். நான் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன்” எனக் கூறியிருக்கிறார். அதன்பின் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் வசை பாடிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துவிட்டனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியும், கோவில்பட்டி வட்டாரத்தில் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திராகாந்தி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் செல்வகுமார் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து செல்வகுமாரை நெல்லை சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹாசிமணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதே போல காவல்துறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக இந்திராகாந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். அவர் வெளியூரில் இருப்பதாகக் கூறியதால் அவரது வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவினை ஒட்டினர்.  

சென்னை: "பாசமாகப் பேசுவார்; பணத்தைப் பறிப்பார்" - மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றிய பிரபல திருடன்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் ப... மேலும் பார்க்க

போலி ஐ.டி கார்டு, சீருடையில் சென்று மும்பை கடற்படையில் துப்பாக்கியைத் திருடிய நபர் - என்ன நடந்தது?

மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து ப... மேலும் பார்க்க

`புலியைப் பிடிக்க மாட்டீங்களா?' - வனத்துறை 10 பேரை புலிக்காக வைத்த கூண்டுக்குள் அடைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த சில நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்தப் புலியைக் பிடித்து காட்டுக்குள்... மேலும் பார்க்க

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்... மேலும் பார்க்க

பா.ம.க நிர்வாகி ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு; போலீஸால் தேடப்பட்ட நபர் தற்கொலை! - என்ன நடந்தது?

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேல மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செ... மேலும் பார்க்க