செய்திகள் :

பா.ம.க நிர்வாகி ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு; போலீஸால் தேடப்பட்ட நபர் தற்கொலை! - என்ன நடந்தது?

post image

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேல மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வகிக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டார். இவர் தற்போது டாக்டர் ராமதாஸ் அணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றனர்.

தற்கொலை செய்து கொண்ட லட்சுமணன்

அப்போது தனது அறையில் இருந்த கழிப்பறைக்குள் மறைந்திருந்து தப்பித்தார் ம.க.ஸ்டாலின். இந்த சம்பவத்தில் அவரது ஆதரவாளர்களான களம்பரத்தைச் சேர்ந்த இளையராஜா(44), மஞ்சமல்லியைச் சேர்ந்த அருண் (25) ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்தனர். இதையடுத்து கொலை முயற்சியில் ஈடுப்பட்ட கும்பல் வந்த காரிலேயே தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ம.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தலையில் குற்றவாளிகள் சென்ற கார் விழுப்புரம் மாவடத்தில் நின்றதைத் தொடர்ந்து போலீஸார் அந்த காரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல் சரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸில் சரணடைந்த மருதுபாண்டியன் என்பவரிடமும் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் உடையாளூரை சேர்ந்த லடசுமணன்(35) என்பவர் குற்றவாளிகள் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகம்

போலீஸார் தலைமறைவாக இருந்த லட்சுமணனை சந்தேகத்தின் பேரில் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து லட்சுமணன் தம்பி ராமனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், நேற்று இரவு லட்சுமணன் மனைவி மதனாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தநிலையில் நேற்று இரவு, லட்சுமணன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணம், ஆடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்... மேலும் பார்க்க

“உன் உயிர் என் கையில்தான்”-பெண் காவலரை மிரட்டிய எஸ்.ஐ; இருவரும் சஸ்பெண்ட்! - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார். அதே பிரிவில் இந்திராகாந்தி என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந... மேலும் பார்க்க

RCB-காக வாழ்க்கையை தொலைத்த இளைஞர்: 2022-ல் நடந்த கொலை- துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் சொல்வது என்ன?

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து நண்பன் தர்மராஜிடம் அவதூறாக பேசியிருக்கிறார் விக்னேஷ்.இதனால், விராட் கோலியின் ரசிகரான தர்மராஜுக்கு இது ஆத்திரத்தைக் ... மேலும் பார்க்க

``நவோனியா கும்பலால் சென்னையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்'' - காவல்துறை எச்சரிக்கை

சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு, பஸ்ஸிற்கு காத்திருப்போம். பஸ் வந்ததும் முண்டி அடித்துகொண்டு ஏறுவதில், நம் உடைமைகளின் மீது அவ்வளவு கவனம் செலுத்தமாட்டோம். பஸ் ஏறியதும் தான், நம் மொபைல் போன்... மேலும் பார்க்க

கூடலூர்: தொடரும் யானை - மனித எதிர்கொள்ளல்கள்; 4 மாதத்தில் 5 பேர் உயிரிழப்பு; கொதிக்கும் மக்கள்

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானை - மனித எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இரு... மேலும் பார்க்க