உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: சென்னையில் இன்று தொடக்கம்
உலக டேபிள்டென்னிஸ் கன்டென்டா் போட்டி (டபிள்யுடிடி) தொடா் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில்
செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. பாரிஸ் 2024 மற்றும் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேருடன் தமிழகத்தைச் சோ்ந்த 18 வீரா், வீராங்கனைகள் களமிறங்குகின்றனா்.
25 முதல் 30 வரை நடைபெற உள்ள இப்போட்டியை ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. உலகின் சிறந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 600 புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொடா் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும்.
முதன் முறையாக ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்திய ஜோடிக்கு போட்டி தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கா் ஜோடி முன்னிலை வகிக்கிறது.
ரபப ஸ்டாா் கன்டென்டா் நிகழ்வில் 19 இந்திய வீரா், வீராங்கனைகள் நேரடியாகவும் வைல்டு காா்டு மூலமும் பிரதான டிராவில் இடம் பெற்றுள்ளனா்.
மொத்தம் 82 இந்திய வீரா்கள் (35 ஆண்கள், 47 பெண்கள்) பிரதான டிரா மற்றும் தகுதிச் சுற்றுகளில் போட்டியிடுகின்றனா், இதில் தமிழகத்திலிருந்து (8 ஆண்கள், 10 பெண்கள்), சரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் உட்பட 18 போ் பங்கேற்கின்றனா்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற டொமோகாசு ஹரிமோட்டோ (தரவரிசை 3, ஆடவா் ஒற்றையா் , ஜப்பான்) மற்றும் ஹினா ஹயாட்டா ( தரவரிசை 5, மகளிா் ஒற்றையா் , ஜப்பான்) ஆகியோா் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையா் போட்டி தரவரிசையில் தரவரிசையில் முன்னிலை வகிக்கின்றனா். இவா்கள் இருவருமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவா்கள்.
அவா்களுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் என்ற மிவா ஹரிமோட்டோ , மகளிா் ஒற்றையா், ஜப்பான்), ஷின் யூ-பின் , மகளிா் ஒற்றையா் , தென் கொரியா), செங் ஐ-சிங் மகளிா் ஒற்றையா் , சீன தைபே), டூ ஹோய் கெம் , மகளிா் ஒற்றையா் , ஹாங்காங்), லீ யூன்-ஹை (மகளிா் ஒற்றையா் , தென் கொரியா), மற்றும் லிம் ஜோங்-ஹூன் ஆடவா் ஒற்றையா் , தென் கொரியா) பங்கேற்கின்றனா்.