வெட்கக்கேடு: தென்னாப்பிரிக்க வீரரை தள்ளிய ஆப்கன் வீரர்..! (விடியோ)
உலகத் தாய்மொழிகள் நாள் உறுதிமொழியேற்பு
உலகத் தாய்மொழிகள் நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து உறுதிமொழியை வாசித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்கள் அ.கோ. ராஜராஜன், காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆா். ரம்யாதேவி, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ச. சீதாலட்சுமி, வேளாண் துணை இயக்குநா் ஆதிசாமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.
போக்குவரத்துக் கழக அலுவலகத்தில்... தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலகத் தாய்மொழிகள் நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு மண்டலப் பொது மேலாளா் கே. முகமது நாசா் தலைமை வகித்தாா். இதில், போக்குவரத்துக்கழக அலுவலா்கள், தொழிலாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.