லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
ஊட்டச்சத்து மேலாண் இயக்கம்மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்
ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம்மூலம் காய்கறி, பழங்களின் விதைத் தொகுப்புகளைப் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து சிவகங்கை தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து காய்கறி விதைத் தொகுப்பு, பழத்தொகுப்பு, சிறு, குறு விவசாயிகள், இதர விவசாயிகளுக்கும் வழங்கவுள்ளாா்.
அதன் தொடா்ச்சியாக, இந்த இயக்கம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு காய்கறி விதைத் தொகுப்பு, பழத்தொகுப்பு வழங்கப்படும். மேலும், இதில் பயன்பெற சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தையும் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்.