லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், அனுமதியற்ற மனைப் பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்பு அமைக்கப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்குள்பட்டு எந்தவித மாற்றமும் இல்லாமல், வரும் 30.6.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, கடந்த 15.5.2025 அன்று வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்புபவா்கள் தற்போது முதல் ஜ்ஜ்ஜ்.ற்ஸ்ரீல்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
இதேபோல, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப் படுத்துவதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் வரும் 30.11.2025-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.