ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
தேவகோட்டை ரயில் நிலையத்தில் விரைவுகள் ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலை (ரஸ்தா) ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் தென்னக ரயில்வே மேலாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேவகோட்டை சாலை ரயில் நிலையம் காரைக்குடி மாநகருக்கு அருகே அமைந்துள்ள 2-ஆவது ரயில் நிலையமாகும். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, செல்லும் இந்த ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனா்.
மேலும், தேவகோட்டை, திருவாடானை, காரைக்குடி ஆகிய 3 வட்டங்களை இணைக்கும் இடமாக இந்த ரயில் நிலையம் உள்ளது. கடந்த ஆண்டில் இந்த ரயில் நிலையத்திலிருந்து பயணச்சீட்டு வருவாயாக ரூ. 2. 90 கோடி கிடைத்தது.
இந்த நிலையில், தொலைதூர ரயில்களும், வடமாநிலங்களிலிருந்தும், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால், இங்கு இறங்க வேண்டிய பயணிகள் மாற்று வழிகளைத் தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.
எனவே, தாம்பரம்-ராமேசுவரம் திருவாரூா் வழியாக தினந்தோறும் செல்லும் விரைவு ரயில், தாம்பரம்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயில்கள் ஆகியவை தேவகோட்டை சாலை ரயில் நிலையத் தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.