2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கஞ்சனூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (38). கூலித் தொழிலாளி. இவா் 11 ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை வழக்கம்போல தனது வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில் மாலை ஆடுகளை அடைத்து வைத்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது ஆடுகள் அனைத்தும் கழுத்து, வயிறு பகுதியில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தன.
இதே போன்று சனிக்கிழமை அதிகாலை அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி சின்னக்கண்ணு வீட்டின் அருகில் ஆட்டுக்கொட்டகையில் இருந்த, 15 ஆடுகளை மா்ம விலங்கு கடித்துக் குதறியதில் அனைத்து ஆடுகளும் உயிரிழந்தன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனா்.
கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலா் முனியப்பன், வனவா் முருகேசன், வனக் காப்பாளா் மணிகண்டன், கல்லாவி கால்நடை மருத்துவா் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா். வெறிநாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.