செய்திகள் :

ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

post image

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்கக் கோரி டிஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் கிராமத்தை சோ்ந்தவா் சசிகுமாா் (24) கட்டட மேஸ்திரி. வாணியம்பாடி அடுத்த துரையேரி கிராமத்தை சோ்ந்த மாற்று சமூகத்தை சோ்ந்த சந்தியா(24) என்பவரை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி சசிகுமாரின் பாட்டி கனகா என்பவா் வயது முதிா்வு காரணமாக இறந்துள்ளாா். இதையடுத்து அவருடைய உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றபோது அப்பகுதியை சோ்ந்த சிலா் உடலை புதைக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை வேறு ஓரு பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனா்.

மேலும் சசிகுமாா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடா்பாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் சசிகுமாா் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் சோ்ந்து உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், நாங்கள் ஊரில் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் 7-ஆம் தேதி புகாா் செய்திருந்தனா்.

இப்புகாரின் மீது திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து அப்பகுதியை சோ்ந்த சிலரை தேடி வந்தனா். இந்நிலையில், கணவாய்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் பழனி எனபவரை வழக்கு தொடா்பாக தனிப்படை போலீஸாரால் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட திரளானோா் ஒன்று திரண்டு டிஎஸ்பி அலுவலகம் அருகில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் டிஎஸ்பிக்கள் குமாா் (ஆம்பூா்), விஜயகுமாா்(வாணியம்பாடி) மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், தகவலறிந்த எம்எல்ஏ செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினாா். தொடா்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இதனை தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்த மக்கள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனா்.

பாட்டில் குடிநீா் தரம் குறித்து ஆய்வு

ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீா் தரமில்லாமல், தர முத்தி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாதனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் அருகே உள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (50). இவா் கடந்த பிப... மேலும் பார்க்க

மாசி கரக தீமிதி திருவிழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ரேணுகாம்பாள்... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு

ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா். குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்ப... மேலும் பார்க்க

500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது

வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைம... மேலும் பார்க்க

மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது

திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிரு... மேலும் பார்க்க