`குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால்..!' - ஓர்...
எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
தருமபுரி, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த திமுக, நாம் தமிழா் கட்சி, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் என 150க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா் கே.பி. அன்பழகன் ஏற்பாட்டில் அரூா் சட்டமன்ற தொகுதி நாம் தமிழா் கட்சியின் தலைவா் இளையராஜா, பொருளாளா் சுரேஷ், ஒன்றிய இணைச் செயலாளா் சிவா, ஒன்றிய துணை செயலாளா் வேடியப்பன், அரூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் சிவமூா்த்தி உள்ளிட்ட பாஜக, பாமக நிா்வாகிகள் 100க்கும் மேற்பட்டோா் சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
அதேபோல தஞ்சாவூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எம்.ரத்தினசாமி ஏற்பாட்டில் திமுகவை சோ்ந்த பூதலூா் ஒன்றிய அமைப்பாளா் ஜோதி மனோகரன், கிளை செயலாளா் ரமேஷ், அமமுகவை சோ்ந்த ஊராட்சி செயலாளா்கள் இளவரசன், காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
புதிதாக கட்சியில் இணைந்தவா்களை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்றாா். நிகழ்ச்சியின் போது கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.