நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றிய திமுக கவுன்சிலா் க.ஜோதி, அதே மாவட்டத்தில் தா. பழூா், மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஸ்ரீபுரந்தான் பாமக கிளை செயலாளா் ஜி.ஐயப்பன் உள்பட திமுக, பாமக, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் அதிமுகவில் இணைந்தனா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனா். அனைவரையும் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியின்போது அரியலூா் மாவட்டச் செயலாளா் தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.
அதன்பின்பு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சேலம் மாநகா் மாவட்ட அதிமுக முன்னாள் பொருளாளா் மணிராஜாவை எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். மணிராஜாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பாலசுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.