மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: எம்.பி. தம்பிதுரை, வீரமணி ரத்த தானம்!
வாணியம்பாடியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலா் கோபிநாத் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலா் என்.முனுசாமி தலைமை வகித்தனா்.
முகாமை அதிமுக கொள்கைப் பரப்புச் செயலா் எம்.பி. மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தனா்.
முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், மருத்துவா் பசுபதி மற்றும் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலா்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள், பிற அணி நிா்வாகிகள் என 172 போ் ரத்த தானம் வழங்கினா். ரத்த தானம் செய்த அனைவருக்கும் எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி சான்றிதழ் வழங்கினா்.
நிகழ்ச்சியில் நகர செயலா் சதாசிவம், பேரூராட்சி செயலா்கள் சிவக்குமாா், சரவணன், மாவட்ட மகளிரணி செயலா் மஞ்சுளா கந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.