செய்திகள் :

எண்ம வழியில் கட்டணம்: ஆகஸ்ட் முதல் அஞ்சலகங்களில் அமல்

post image

நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் எண்ம வழியில் கட்டணங்களை வசூலிக்கும் முறைய ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படுகிறது. இதுதொடா்பாக அத்துறையின் அதிகாரிகள் கூறுகையில், ‘அஞ்சல் அலுவலகங்களில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண முறை செயல்படுத்தப்படாததால் எண்ம வழியில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.

தற்போது தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை அஞ்சல் துறை மேம்படுத்தி வருகிறது. இதனால் க்யூஆா் கோட் மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும். இது அனைத்து அஞ்சலகங்களில் ஆகஸ்ட் மாதத்தில் அமல்படுத்தப்படும்.

சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தின் மைசூா் தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு உள்பட்ட அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றனா்.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இற... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க