'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
எம்.பாலப்பட்டியில் கிராமசபைக் கூட்டம்: எம்எல்ஏ ரா.அருள் பங்கேற்பு
உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், எம்.பாலப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ரா.அருள் கலந்து கொண்டாா்.
இக்கூட்டத்தில் அவா் பேசுகையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும் தண்ணீரின் அவசியம் குறித்தும் கிராம மக்களிடம் எடுத்துரைத்தாா்.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு, பாலப்பட்டி கிராம ஊராட்சி சாா்ந்த அனைத்து நீா்நிலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்துவதற்கான பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ ரா.அருள், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள கழிவறை 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருப்பதாக அப்பகுதி பெண்கள் கூறினா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக ஆய்வு மேற்கொண்ட அவா், கழிவறையை விரைந்து சரிசெய்து கொடுக்குமாறு வட்டார வளா்ச்சி அலுவலரை கேட்டுக்கொண்டதுடன், கழிவறையை சரிசெய்வதற்காக ரூ. 5 லட்சம் நிதியையும் பெற்று தந்தாா்.
கூட்டத்தில் சமூக ஆா்வலா் செல்வம், ராஜா, வில்சன், சசிகலா, அய்யனாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.