செய்திகள் :

எளிய முறையில் பான்கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

post image

எளிமையான முறையில் மற்றவர்களின் உதவியில்லாமல் ஆன்லைனில் பான்கார்டுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

வங்கிக் கணக்கு தொடங்குதல், வரி செலுத்துதல், வங்கி பரிவர்த்தனைகள் என அனைத்துவித நிதி தொடர்பான செயல்பாடுகளில் பான் கார்டு (PAN card) என்றழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.

நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித் துறையால் ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான 10 இலக்க எண். இது ஒரு நபரின் வருவாய், வரி கணக்குகளை அடையாளம் காணவும் உதவுகிறது.

இது வருமான வரி கணக்கு, வரி செலுத்துதல், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தல், சொத்து வாங்குதல், விற்பது போன்ற பல்வேறு பணப்பரிமாற்றங்களுக்கும் மிகத் தேவையான ஒன்றாகவுள்ளது. மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிரந்தர கணக்கு எண்ணானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இதன்மூலம், வரிஏய்ப்பு போன்ற சட்டத்துக்குப் புறம்பான நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.

பான் கார்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.107 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை காசோலையாகவோ, வங்கி வரைவோலை மற்றும் ஆன்லைன் பேங்கிங் வழியாகவும் செலுத்தலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ரூ. 971 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இணையதளத்தின் மூலம் பான் கார்டு திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை

  • ஆதார் இணைப்பு கொண்ட மொபைல் எண்

  • அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

  • கையொப்பத்தின் ஸ்கேன் செய்த புகைப்படம்

விண்ணப்பிக்கும் நடைமுறைகள்

  • இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இணையதள முகவரி: https://tin.tin.nsdl.com/pan/ க்குள் செல்ல வேண்டும்.

  • new application option-ஐ தேர்வு செய்ய வேண்டும்

  • pan application type- ல் indian citizen (form 49 A)-தேர்ந்தெடுக்க..

  • Select Applicant Category - indivual - ஐ தேர்வு செய்ய வேண்டும்

  • அதன்பின்னர், அங்கு கொடுக்கப்பட்டுள்ள பாலினம், பெயர், பிறந்த தேதி, இணையதள முகவரி, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணையும் கொடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் கிளிக் செய்ய வேண்டும்.

  • உங்கள் இணையதள முகவரிக்கு புதிய டோக்கன் எண் ஒன்று உருவாகியிருக்கும்.

  • அதில், continue என்பதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். (இந்த டோக்கன் எண் 30 நாள்களுக்கு மட்டுமே செயல்படும்)

  • அதைத் தொடர்ந்து 2-வது ஆப்ஷனாக இருக்கும் PAN Application with supporting documents (Scan, Upload and eSign) என்பதைத் தேர்ந்தெடுத்து, மென்பொருள் வழியாகவும், அஞ்சல் மூலமாகவும் பான்கார்டு வேண்டும் என்ற தேர்வைத் தொடரவும்.

  • அதன் பின்னர், ஆதார் எண்ணில் கடைசி நான்கு எண்களை அங்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் பதிவிட்டு, பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை மீண்டும் குறிப்பிட வேண்டும்.

  • அடுத்ததாகத் தோன்றும் Is your mother a single parent, and do you wish to apply for a PAN by furnishing only her name? கட்டங்களில், ‘உங்களுக்கு ஒருவேளை தந்தை இறந்து தாய் மட்டுமே இருக்கிறார்’ என்றால், இதில் ஆம் என்பதைக் கொடுத்து தொடரவும். இல்லையென்றால் No கொடுத்துவிடலாம்.

  • உங்கள் வருமானத்திற்கான ஆதாரத்தை அதில் நிரப்ப வேண்டும்.

  • அதைத் தொடர்ந்து வீட்டு அல்லது அலுவலக முகவரி குறித்து கேட்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நிரப்புங்கள்.

  • நம்முடைய ஆதாரங்களை உறுதிசெய்வதற்காக மூன்று கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த மூன்றிலும், ஆதார் கார்டை தேர்வு செய்துகொள்ளலாம்.

  • Declaration- கட்டத்தில் பெயர், himself / herself கொடுத்து உங்கள் ஊரின் பெயரையும் கொடுக்க வேண்டும்.

  • அடுத்ததாக உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • ஒருமுறை அனைத்து தகவல்களையும் சரிபார்த்துவிட்டு, payment option - ஐ கொடுக்க வேண்டும். அதில், வங்கி வரைவோலை, ஆன்லைன் பேமெண்ட் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

  • இதற்கு ரூ.107 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

  • பணம் செலுத்தியதும் authenticate என இருக்கும் பொத்தானை அழுத்தி, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதை உள் செலுத்தி சரிபார்த்து உறுதி செய்யவேண்டும்.

  • இதெல்லாம் சமர்ப்பித்தவுடன் Continue with eSign என்ற ஆப்ஷனை தொடர வேண்டும். மீண்டும் ஒரு முறை ஆதார் எண்ணை உள் செலுத்தி ஒரு முறை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • கடைசியாக Acknowledgement - ஆப்ஷனில் Download PDF கொடுத்து விண்ணப்பித்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2 முதல் 3 நாள்களில் மென்நகல்(soft copy) உங்கள் இணையதள முகவரிக்கும், ஓரிரு வாரங்களில் பான் கார்ட் அட்டை தபால் மூலமும் வீட்டிற்கு வந்துவிடும்.

How To Apply For PAN Card Online And Offline?

இதையும் படிக்க: எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

இ-பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்

பொதுவாக பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல்கள், கால தாமதம், சிவப்பு நாடா முறை, பல ஆண்டுகள் காத்திருப்பு என அனைத்தும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிட்டன.மத்திய வெளியுறவு விவகாரத் து... மேலும் பார்க்க

அவசர உதவி! தெரியாதவங்க.. தெரிஞ்சுக்கோங்க!!

அனைவருக்கும் சில சமயங்களில் ஏதோவொரு கட்டத்தில் ஏதேனும் ஓர் அவசர உதவி எண் தேவைப்படலாம். இணைய வசதி இருந்தால், தேவைப்படும் அவசர உதவி எண்ணை அறிந்து விடலாம்; ஆனால், அவசர உதவி தேவைப்படும் தருணத்தில் இணைய வச... மேலும் பார்க்க

எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?

கடல்கடந்து வான்வெளி வழியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பது அனைவரின் கனவாகவே இருக்கிறது. வேலை வாய்ப்பு, உயர்கல்வி, புனிதப் பயணம், சுற்றுலா, வணிக நோக்கங்களுக்காக, மருத்துவ மற்றும் குடும்ப... மேலும் பார்க்க