சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டின் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேற்கு வங்கமாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை வழியாக திருச்சி செல்லும் விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா். ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையைச் சோதனையிட்டபோது அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். அதைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினா் சென்னை அண்ணா நகா் மதுவிலக்கு கண்காணிப்புப் பிரிவினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
35 கிலோ குட்கா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த பண்டல்களை போலீஸாா் பிரித்து சோதனையிட்டனா். அதில், 36 கிலோ எடையுள்ள ரூ.35, 750 மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டன. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படை கைப்பற்றறி விசாரித்து வருகின்றனா்.