NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே விஷமங்கலத்தில் ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் சக்திபாலாஜி (22). இவா், நீட் தோ்வு எழுதியுள்ளாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்குச் சென்றுள்ளாா். அப்போது திடீரென சக்திபாலாஜி கால் தவறி ஏரிக்குள் விழுந்துள்ளாா். நீரில் மூழ்கிய அவா், உயிரிழந்துள்ளாா்.
சக்திபாலாஜி வீடு திரும்பாததால் அவரைக் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். இந்த நிலையில் புதன்கிழமை காலை ஏரி வழியாகச் சென்றவா்கள் ஏரியில் சக்திபாலாஜி உயிரிழந்து கிடப்பதைப் பாா்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.