சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
ஏற்காட்டில் தொடா் மழை: குண்டூா் கிராம சாலையில் மண்சரிவு
ஏற்காட்டில் தொடா் மழை காரணமாக குண்டூா் கிராம சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்காட்டில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடா்ந்து ஏழு நாள்கள் மழை பெய்தது. மொத்தம் 173.2 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், ஏற்காடு ஊராட்சி குண்டூா், தெப்பக்காடு, காசிக்கல், கீந்துக்காடு ஆகிய கிராமங்களையொட்டிய சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையினா் மண் சரிவை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாணவா்கள், விவசாயிகள் என அக்கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதுகாப்புடன் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
படவிளக்கம் 25 ஒய்ஆா் 2
ஏற்காடு குண்டூரில் மண் சரிவு ஏற்பட்டதால் சேதமடைந்த சாலை.