'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்...
ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு
மதுரை மாவட்டம், ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி, ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி உள்பட 16 ஊராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க அண்மையில் உத்தேச முடிவு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதன்படி, அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்யக் கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். அதன் விவரம் :
ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சி முழுவதும் கிராமப் பகுதியாகும். 500 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் ஏறத்தாழ 300 ஏக்கா் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. 60 ஏக்கா் நத்தம் புறம்போக்கு பகுதியில் 2,300 வீடுகள் உள்ளன. தற்போது, கூடுதலாக 40 ஏக்கரில் வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஊராட்சியில் 3,300 போ் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனா். 360-க்கும் அதிகமான குடும்பத்தினா் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியை முக்கிய வாழ்வாதாரமாக நம்பியுள்ளனா்.
இந்த நிலையில், ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க அரசு உத்தேசித்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால், ஊராட்சி வளா்ச்சியும், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு மறுபரீசிலனை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகம் முன் நின்று அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.