ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!
பங்குச் சந்தை இன்று(மார்ச் 21) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,155.00 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.40 மணியளவில், சென்செக்ஸ் 639.83 புள்ளிகள் அதிகரித்து 76,987.89 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187.25 புள்ளிகள் உயர்ந்து 23,377.90 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க | பரிசீலனையில் புதிய ரேஷன் அட்டைகள்! - அமைச்சர் முக்கிய தகவல்
சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே, கோட்டக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி, மாருதி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.
அதேநேரத்தில் இன்ஃபோசிஸ், டைட்டன், எச்.சி.எல். டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன .
பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த வாரத்தில் முதல் மூன்று நாள்கள் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் நேற்று சரிவுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.