தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்த முடிந்த பங்குச் சந்தை!
மும்பை: பங்குச்சந்தை குறியீட்டு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று எதிர்மறையான குறிப்பில் தொடங்கி வர்த்தகமான நிலையில், குறிப்பாக அந்நிய நிதி வரத்து அதிகரித்ததால், சரிவிலிருந்து மீண்டெழுந்து உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 252.8 புள்ளிகள் சரிந்து 76,095.26 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 57.85 புள்ளிகள் குறைந்து 23,132.80 புள்ளிகளாக இருந்தது.
பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 639.83 புள்ளிகள் அதிகரித்து 76,987.89 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187.25 புள்ளிகள் உயர்ந்து 23,377.90 வர்த்தகமானது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 557.45 புள்ளிகள் உயர்ந்து 76,905.51 புள்ளிகளிலும், நிஃப்டி 159.75 புள்ளிகள் உயர்ந்து 23,350.40 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே, கோடக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி, மாருதி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.
இருப்பினும் இன்போசிஸ், டைட்டன், ஹெச்சிஎல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் சோமேட்டோ ஆகியவை சரிந்து முடிந்தது.
அதே வேளையில், நிஃப்டியில் பிபிசிஎல், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்தும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ட்ரெண்ட், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த வாராந்திர லாபத்தைப் பதிவு செய்தன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1 முதல் 2 சதவிகிதம் வரை அதிகரித்து முடிந்தது.
நுகர்வோர் சாதனங்கள் மற்றும் உலோகம் தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தது. எண்ணெய் & எரிவாயு, ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை தலா 2 சதவிகிதம் வரை உயர்ந்தது.
மணப்புரம் ஃபைனான்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், யுபிஎல், கோடக் மஹிந்திரா பேங்க், ஸ்ரீ சிமெண்ட்ஸ், எஸ்ஆர்எஃப், வெல்ஸ்பன் கார்ப் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உயர்வை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) ஓரளவு சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,239.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் எண்ணெய் 0.43 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.31 டாலராக உள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 899.01 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதையும் படிக்க: விலை உயரும் மாருதி காா்கள்