கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
ஐபிஎல்: சென்னைக்கு எதிராக ஹர்திக் விளையாடமாட்டார்! ஏன்?
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதையும் படிக்க : சாப்பிட பணமில்லாமல் கஷ்டப்பட்டவர் இன்று மும்பை அணியின் பெருமைமிக்க கேப்டன்: நீதா அம்பானி
ஹர்திக் விளையாடமாட்டார்
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடும் முதல் லீக் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்.
கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியனஸ் அணி இரண்டு முறை மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, மும்பை அணி விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால், ஐபிஎல் விதிகளின்படி, மூன்றாவது முறை ஒரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதமும், அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
இதனால், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அணிக்கு மீண்டும் திரும்புவார்.
மேலும், சென்னைக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.