Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு: அருவிகளில் குளிக்க தடை
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்தாா்.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 18,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடித்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்துள்ளாா். இந்த தடை உத்தரவு காரணமாக பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேட்டூா் அணை நீா்மட்டம் சனிக்கிழமை 119.88 அடியாக அதிகரித்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 18,357 கனஅடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 17,000 கனஅடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு உயா்நிலை மதகுகள் வழியாக 800 கனஅடியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 93.28 டிஎம்சியாக உள்ளது.