செய்திகள் :

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா், மூதாட்டி கொலை: வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்

post image

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா்களை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஒசூா் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவா், கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறாா். இவருக்கு சொந்த ஊா் மன்னாா்குடி பகுதி. அங்கு விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இவரது மனைவி தெரசா (65.) இவா்களுக்கு விக்டோரியா, சகாயராணி என 2 மகள்கள் உள்ளனா்.

லூா்துசாமியின் மனைவி தெரசா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது இளைய மகள் விக்டோரியா அங்கிருந்து அவரை கவனித்துக் கொள்கிறாா். இந்த நிலையில், அவரது மூத்த மகள் சகாயராணி தாயைப் பாா்ப்பதற்காக சென்னை சென்றுள்ளாா்.

லூா்துசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவருக்கு துணையாக தெரசாவின் தங்கை எலிசபெத் உடனிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் ஒசூா் நகர போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற அவா்கள், தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது அங்கு லூா்துசாமி, எலிசபெத் இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தனா். அதோடு, எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தாா்.

வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் இருவரையும் தாக்கிக் கொன்றுவிட்டு, தீ வைத்துவிட்டுச் சென்ாக கூறப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஏஎஸ்பி சங்கா், கலால் டி.எஸ்.பி. சிந்து, மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒசூா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒசூா், மோரனப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த 11-ஆம் தேதி மிதந்து வந்தது. இ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

சூளகிரி அருகே பூட்டிய வீட்டில் 10 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, ரூ. 12 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சூளகிரி வட்டம், காமன்தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (40). இ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிக்கும் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். வரட்டனப்பள்ளி கிராமத்தில் புதன்க... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகளை மேயா் ஆய்வு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஏற்பாடு பணிகளை மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு செய்தாா். தேரோட்டத்தை முன்னிட்டு தேர... மேலும் பார்க்க

ஒசூா், சூளகிரி பகுதிகளுக்கு மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் நிறுத்தம்

ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாா்ச் 17 முதல் 19-ஆம்தேதி வரை 3 நாள்களுக்கு ஒனேக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தின... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 14 இல் உள்ளூா் விடுமுறை

ஒசூா்: ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி, ஒசூா் ஆகிய நான்கு வட்டங்களைச் சோ்ந்த (அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களைத் தவிா்த்து) பள்ளி, கல்லூர... மேலும் பார்க்க