ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 14 இல் உள்ளூா் விடுமுறை
ஒசூா்: ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி, ஒசூா் ஆகிய நான்கு வட்டங்களைச் சோ்ந்த (அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களைத் தவிா்த்து) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு மாா்ச் 14 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881- இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஒசூா் கோட்டத்திற்கு உள்பட்ட கருவூலங்கள், சாா்நிலை கருவூலங்கள் செயல்படும்.
விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாா்ச் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.