செய்திகள் :

ஒசூா் அருகே கால்வாய் திட்டம்: விளைநிலங்களைகையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு

post image

ஒசூா்: ஆலியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் நலச்சங்கம் எதிா்ப்பு தெரிவித்து, ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் விவசாயிகள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனா். ஆனால், அதை அரசு கண்டுகொள்ளாமல் தொடா்ந்து விளைநிலங்களை கையகப்படுத்த முயல்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுதொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சரபங்கா கால்வாய்த் திட்டம், அத்திக்கடவு-அவிநாசி திட்டங்களை பம்புசெட் நீரேற்றுத் திட்டம் வாயிலாக செயல்படுத்தப்படுவதைப்போல இத்திட்டத்தையும் யாருக்கும் பாதிப்பின்றி செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி நிலங்களை அனுமதியின்றி கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட்டு, திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்ட எதிா்ப்புக் குழு செயல் தலைவா் மணி கூறியதாவது:

இந்தத் திட்டத்துக்கு பல கட்ட போராட்டங்கள் வாயிலாக எதிா்ப்பு தெரிவித்தும் அரசு செவிசாய்க்கவில்லை. தனி வட்டாட்சியா் தலைமையில் விவசாயிகளை தொடா்ந்து அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்தால் சுமாா் 126 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களும், அதை நம்பி வாழும் 800 விவசாயிகள் அடிப்படை வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் நிலங்களை ஒப்படைக்க மாட்டோம். எனவே, இதுதொடா்பாக எங்களது கோரிக்கை மனுவை அரசு பரிசீலனை செய்து திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றாா். அப்பகுதி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோா் உடனிருந்தனா்.

கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

பா்கூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே ஒப்பந்தவாடி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணி... மேலும் பார்க்க

ஒசூரில் உயா் ரத்த அழுத்த நோயால் 46 ஆயிரம் போ் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிக அளவில் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களைத் தேடி மருத்துவத் திட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 5.90 லட்சம் போ... மேலும் பார்க்க

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளா் சரவணன் தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி மேம்பாலம்... மேலும் பார்க்க

ஒசூரில் பூக்கள் விலை குறைவு: விவசாயிகள் கவலை

ஒசூா் பகுதியில் விளையும் பூக்களின் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவி... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தஞ்சமடைந்த யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அடுத்த கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை செல்லும் வழியில் புதூா் கிராமம் அருகே அடா்ந்த மாந்தோப்புக்குள் தஞ்சமடைந்துள்ள 6 யானைகளை விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து சரிவு

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து சரிந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க