Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
ஒட்டன்சத்திரத்தில் இறந்தவரின் உடலை ஏற்றி ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஒட்டன்சத்திரத்தில் இறந்தவரின் உடலை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ஹீதா் என்ற ஆம்புலன்ஸ் ஒட்டுனா் வெள்ளிக்கிழமை கோவை தனியாா் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த பெண்ணின் உடலை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டு இருந்தாா்.அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் பட்டாளஈஸ்வரி கோவில் அருகே சென்ற போது ஸ்டேரிங்ராடு கட்டாகி ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.இதில் ஆம்புலன்ஸ் ஒட்டிவந்த ஒட்டுனா் மற்றும் உடன் வந்த இருவா் உள்ளிட்டோா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.