விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
ஒட்டன்சத்திரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 போ் கைது
ஒட்டன்சத்திரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் (23). இவா் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, சத்யா நகா் பாய் கடை அருகே அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (20), சத்யாநகா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (17) ஆகிய இருவரும் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தனராம்.
இதைத் தட்டிக் கேட்ட ஜீவரத்தினத்தை அவா்கள் இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டினா். இதில் அவா் காயமடைந்தாா். இதுகுறித்தப் புகாரின் பேரில், நவீன்குமாா், சந்தோஷ் இருவரையும் ஒட்டன்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.