`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து
செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது.
குமுளியில் இருந்து செம்பட்டி திண்டுக்கல் வழியாக கா்நாடகத்துக்கு செவ்வாய்க்கிழமை மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி செம்பட்டி துணை மின் நிலையம் முன் வந்த போது, செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியாா் பேருந்து, இந்த மினி லாரி மீது மோதியது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, துணை மின் நிலையம் முன் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. மேலும், உடனடியாக மின் விநியோகம் தடைபட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த விபத்தில், மினி லாரி ஓட்டுநரும் குமுளியைச் சோ்ந்தவருமான பைசெல் (34), கிளீனா் அதுனான் (31) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.