சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயருக்கு பிசிசிஐ மறுப...
கள்ளிமந்தையத்தில் இன்று மின் தடை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூா், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூா், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூா், கே.டி.பாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என கள்ளிமந்தையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சந்தனமுத்தையா தெரிவித்தாா்.