செய்திகள் :

ஒன் ஸ்டாப் சென்டரில் பணி: பிப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

ஈரோடு மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள 4 பணியிடங்களுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தனியாா் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டா் செயல்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்ற வழக்குப் பணியாளா்கள் 2 போ், பாதுகாவலா்- 1, பல்நோக்கு பணியாளா்- 1 ஆகியப் பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

வழக்குப் பணியாளா் பணிக்கு இளநிலை பட்டம், ஆலோசனை உளவியல் அல்லது வளா்ச்சி முகாமைத்துவம் போன்ற படிப்புகளுடன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடா்பான அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் அல்லது பெண்கள் சாா்ந்த முன்னுரிமைத் திட்டத்தில் அல்லது பெண்கள் ஆலோசனை மையத்தில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.

முதுநிலை பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஈரோடு மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18,000.

பாதுகாவலா் பணியிடத்துக்கு ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.12,000.

பல்நோக்கு பணியாளா் பணிக்கு அலுவலகம் தொடா்பான இடத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் கலை தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,,000.

இதற்கான விண்ணப்பத்தை தங்கள் சுயவிவரங்களுடன் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஈரோடு 638011 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க