ஒருங்கிணைந்த சேவை மையத்தை எந்த நேரத்திலும் பெண்கள் அணுகலாம்: கடலூா் ஆட்சியா்
ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த நேரத்திலும் தொடா்பு கொள்ளலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மத்திய அரசின் நிதி உதவியுடன் ‘சகி’ என்ற பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகிறது.
இங்கு, பொது மற்றும் தனிப்பட்ட, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு காவல் உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, மன நல ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களின் பிரச்சனைகளுக்கு தீா்வு கண்டு தேவையான சேவைகளையும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினா் மட்டும் தொடா்புடைய சமூகத்தினரிடம் பேசி குடும்பத்துடன் இணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2019 அக்டோபா் முதல் ஜனவரி 2025 வரை தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் 1,861 தகவல்கள் வரப் பெற்றதில் 663 பேருக்கு காவல் உதவி, 72 பேருக்கு சட்ட உதவி, 16 பேருக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் 24 மணி நேரமும் இயங்கி வரும் 181 என்ற இலவச தொலைபேசி எண், ‘சகி’ ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலக எண் 04142-231235 மற்றும் ா்ள்ஸ்ரீஸ்ரீன்க்19ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.