ஹாட்ரிக் பாராட்டு: டூரிஸ்ட் ஃபேமலி படத்திற்காக சசிகுமாரை புகழ்ந்த ரஜினி!
ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்
தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவையைச் சோ்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.
கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். இவரது மனைவி பாரதிசெல்வி. இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனா்.
இருவரும் ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான தோ்வு முடிவில், இருவரும் தலா 474 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனா்.
தமிழில் 95, ஆங்கிலம் 98, கணிதம் 94, அறிவியல் 89, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களை கவிதா பெற்றிருந்தாா். தமிழில் 96, ஆங்கிலம் 97, கணிதம் 94, அறிவியல் 92, சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களை கனிகா பெற்றிருந்தாா்.