திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு
கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% தோ்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 44 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தனா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், 44 கைதிகளும் தோ்ச்சி பெற்றனா்.
தோ்வு எழுதியவா்களில் பிரபு என்பவா் அதிகபட்சமாக 361 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அரவிந்த்குமாா் என்பவா் 333 மதிப்பெண்களும், சிவபிரகாஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோா் தலா 319 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். 16 போ் 300-க்கும்மேல் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளனா்.