ஓசூரில் புதுகை நபரை கடத்தியவா் கைது
ஓசூரில் வேலை முடித்து ஊருக்குத் திரும்பிய புதுக்கோட்டை நபரை காரில் கடத்தியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் நிஜாம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ராஜா (38). இவா் கடந்த 4 மாதங்களாக ஓசூரிலுள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் கூரை அமைக்கும் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
4 மாத பணி முடிந்து ஊா் திரும்பி அவரை, கடந்த புதன்கிழமை கா்நாடக பதிவு எண்ணைக் கொண்ட காரில் வந்த நபா்கள் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்ாக அவரது மனைவி பானு, மாத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரைத் தொடா்ந்து அவரை மீட்டு வந்த தனிப்படையினா், இதுதொடா்பாக பெங்களூருவைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ஓம்காா் (30) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.